அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Thursday, 31 December 2009

ஆங்கில அடிமைகள் கவனத்திற்கு


நாம் ஆங்கில அடிமைகள் என்பதை வெளி காட்டும்  செயல்களில் இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமும் ஒன்று . கேட்டால் இது உலகில் பொதுவாக நடை முறையில் பயன்படுத்தும்  நாட்காட்டி (காலேண்டர்)  முறை, அதன் முதல் மாதம் ஜனவரி 1 அதை   நாங்கள்  கொண்டாடுகிறோம் என்ற பதில். இந்த ஆங்கில காலேண்டர் என்பது ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பு நாம் பயன்படுத்திய  நாட்காட்டி முறையின் முதன் நாள்  சித்திரை  1 (ஏப்ரல் 14). அதை இன்று தமிழ் புத்தாண்டு என்று அழைக்கிறோம் .


மற்ற நாடுகளில் ஆங்கிலேய காலேண்டர் முறை உலக வர்த்தக நடைமுறைக்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது .எந்தந்த நாடுகளில் சரியான காலேண்டர் பயன்பாட்டில் இல்லையோ அந்த நாடுகள் ஆங்கிலேய காலேண்டர் முறையை பொதுவாக பயன்படுத்துகிறார்கள் . பாரம்பரிய நாடுகளான சீனா , ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள்  புத்தாண்டாக  அவர்கள் பாரம்பரிய நாட்காட்டி முறையின் முதல் தேதியை அறிவித்து உள்ளன . ஆனால் இந்தியாவில் ?????, இந்த ஆங்கில புத்தாண்டு இன்று விமர்சையாக  கொண்டப்படுவது ஆங்கிலேய மோகம் கொண்ட நாடுகளில் தான்.நாமும் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் , இரவு முழுவதும் விழித்து தண்ணியடித்து ,  வாழ்த்து செய்திகள் பரிமாறி கொண்டாடுகிறோம் . நம்மை அடிமைபடுத்திய  அங்கிலேயரின் புத்தாண்டை ஏன் கொண்டாடுகிறோம் ?.

" இல்லை ! இல்லை ! முட்டாள்தனமாக பேசாத !நாங்கள் பொதுமை சிந்தனை உடையவர்கள் ,ஆங்கில புத்தாண்டை   கொண்டாடுவோம் " என்றால் , இதையும் கொண்டாடுங்கள் , பொதுமை சிந்தனை உடையவர்களே !!!                                  நிதி ஆண்டின் புத்தாண்டு - 1  ஏப்ரல் .

                                  கல்வி ஆண்டின் புத்தாண்டு - 1 ஜூன் .

                                  இஸ்லாமியர்களின் புத்தாண்டு - மொகரம் நாள் 

                                  புத்தர்களின்   புத்தாண்டு - ஏப்ரல் மாதம்.
                                தமிழர்களின்   புத்தாண்டு - 14  ஏப்ரல்
                                                                      
  இன்னும் பல..........................அணைத்து நாடுகளின் /  சமயங்களின் புத்தாண்டு தினத்தன்று மக்கள் தங்கள் வழிப்பாட்டு தளங்களுக்கு செல்வார்கள் ,ஆனால் ஆங்கிலேயன் மட்டும் முதலில் தன் புத்தாண்டை கொண்டாட தண்ணியடிப்பன் . இந்த காட்டுமிராண்டிகள் தான் நவீன உலகின் கலாச்சார விடி  வெள்ளிகள் !!!!!!இவை அனைத்தும் அறிந்தும் அடுத்த ஆங்கில புத்தாண்டை நாம் கொண்டாடுவோம் . ஏன் என்றால் ?நாம் ஆங்கில அடிமைகளாக பிறக்கிறோம் !

நாம் ஆங்கில அடிமைகளாக வாழ்கிறோம் !

நாம் ஆங்கில அடிமைகளாக சாகிறோம் !