அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Saturday 15 May 2010

வந்து விட்டது இந்திய ப்ரௌசெர் EPIC


உலகில் உள்ள பல மென்பொருள் நிறுவனங்களில் இந்தியன் வேலை செய்து , மென்பொருள்களை அவர்கள் நாட்டு பாணியில்   அவர்கள் நாட்டு மொழிக்கு உற்பத்தி செய்து வந்தனர். இதனால் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கொழுத்த லாபம் அடைந்தன.இதை பாருங்கள்! உலகில் உள்ள அணைத்து மென்பொருள்களின் வடிவமைப்பிற்கு பின்பும் நிச்சியம் பல இந்தியர்களின்   உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த இந்தியர்களுக்கு ஒரு பிரத்யக வலை உலாவி (Web  Browser ) இல்லை .இதை இந்தியனுக்கு ஒரு அவமானமாகவே நான் கருதுவேன் ! 

ஆனால் இதற்கு தீர்வாக ஹிட்டன்  ரேப்லெக்ஸ் (Hidden Reflex) என்ற பெங்களுருவை சேர்ந்த ஒரு நிறுவனம், இந்தியாவில் இந்தியனுக்காக இந்திய மொழிகளில் உலவும் (Browsing on Indian languages ) ஒரு சிறப்பான உலாவியை (Browser ) எபிக் ப்ரௌசெர் (Epic Browser) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்டது. என்போன்றவர்களின் மொழியல் சொன்னால் இது ஒரு சுதேசி மென்பொருள். 

எப்போதும் போல internet explorer 
போல் வராது , google chrome போல் இருக்காது என்று சித்தாந்தங்கள் பேசி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஜால்ரா தட்டாமல் , எபிக் ப்ரௌசெரை (EPIC Browser ) பயன்படுத்தி இந்திய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளியுங்கள் .மேலும் அதில் ஏதேனும் குறை இருந்தால் அதை அந்த நிறுவனதிற்கு தெரிவிப்பதன் மூலம் , எபிக் ப்ரௌசெரை (EPIC Browser ) மேலும் சிறந்த உலாவியாக (Browser ) மாற்ற முடியும் . 

நம்மை அனைத்திலும் முந்தும் சீனா தன் நாட்டிரிக்கான பிரத்யக வலை உலாவியை   (Browser ) அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகிறது . நாமும் எபிக் ப்ரௌசெரை (EPIC Browser ) பயன்படுத்தி அவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை  பறைசாற்ற வேண்டும்.

Picture

Thursday 6 May 2010

மறைக்கபட்ட சிம்மம்


Picture

சுதந்திர  தினத்தன்று காந்தியின், நேருவின் அல்லது நேதாஜியின் புகைப்படங்களை பத்திரிக்கைகளிலும்,தொலைக்காட்சிகளிலும்  காணலாம்.  காரணம் ! அவர்கள் சுதந்திர இந்தியாவிற்காக பாடுபட்டவர்கள், பல தியாகங்கள் செய்தவர்கள் .இதில் ஏதேனும்  தவறா என்றல்! நிச்சியம்  இல்லை.ஆனால் இதில் மிகப்பெரிய குறை உண்டு, சில தலைவர்களை மட்டும் முன்னிறுத்தி நம் சுதந்திர வரலாற்றை சுருக்குவது நம் சந்ததியனருக்கு செய்யும்  மிகப்பெரிய வரலாற்று மறைப்பு.அது சுதந்திர இந்தியாவிற்காக உழைத்த பல உத்தமர்களுக்கு செய்யும் துரோகம்.

சுதந்திர இந்தியாவிற்கு உழைத்த,உதிரத்தை உதிர்த்த பல தலைவர்களை பட்டியலிட முடியும். அதில் பலராலும் பெயர் மட்டும் அறியப்பட்ட, சுதந்திர  இந்தியாவின் கதவுகளை திறந்துவிட்ட ஒரு ஒப்பற்ற தலைவரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.சுதந்திர  இந்தியா , என்ற கனவு பல இந்தியர்களுக்கு கனவாகவும் , ஒரு புதிராகவும் இருந்த தருணத்தில், ஒரு சிங்கத்தின் குரல் கேட்டது !  "சுதந்திரம்  எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன் " என்று அந்த சிம்மத்தின் குரல் வானை பிளந்து கர்ஜனை செய்தது. அந்த சிம்ம குரலுக்கு சொந்தக்காரர் தான் திரு.லோகமான்ய  பால கங்காதர திலகர். அவர் கருதுக்களை கேட்டாலே சுதந்திர  தாகமெடுக்கும்! அவரை பற்றி  படித்தாலோ நம் ரத்தத்தில் சுதந்திர  சூடேறும்! அவரை பற்றி சில செய்திகளை இங்கே பகிர்வோம் .

1856 ஆம் ஆண்டு இரத்தினபுரியல் (மகாராஷ்டிரா)  ஓர் சாதாரண குடும்பத்தில் திலகர்  பிறந்தார். தமது கடும் முயற்சியால் வழக்கறிஞராக  உயர்ந்தார். கணிதம், வானசாஸ்திரம், சமஸ்கர்தம், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் தனித்துவம் பெற்று விளங்கினார். இந்திய மக்களுக்கு தேவை சிறந்த கல்வி, அதுவே அவர்களை சுய சார்புடையவர்களாக மாற்றும் என்று  கருதி   அதை மெய்பிக்க ஒன்றிணைத்த கல்வி சங்கத்தை தோற்றுவித்து பல இளைஞர்களுக்கு  தேசிய கல்வி வழங்கினார். கேசரி என்ற பத்திரிக்கை    மூலம் மக்களுக்கு  சுதந்திரத்தின்  தேவையையும் , நம் நாட்டின் பண்டைய பெருமைகளையும் எடுத்துரைத்தார். "அரசு தலையில்லா முண்டமா ?" , "ஆட்சி செய்வது பழிவாங்க அல்ல " போன்ற கேசரி பத்திரிக்கையின் தலையங்கங்கள் ஆங்கில அரசையே உலுக்கியது. அதற்கு மேலாக கேசரியை ஆங்கில குள்ள நரிகளின் முகத்திரையை  கிழிக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தினார் .

சுதேசியம் என்ற சிந்தனையை முதலில் தீவிரமாக கையிலே எடுத்தவரும்    திலகரே ! இந்தியாவின் பெருமை அதன் சுதேசியமே என்று கிராமம் கிராமமாக எடுத்து சொல்லி சுதந்திர தாகமூட்டினார். இந்தியாவை சுதந்திர பாதைக்கு அழைத்து சென்ற, உலகையே வியக்க வைத்த இந்திய விடுதலை  போராட்டத்தை  வழிநடத்தியது  இவரின் நாற்கர  கொள்கையே  !

1.    அந்நிய பொருட்களை மறு
2.    தேசிய கல்வி பயில்
3.    சுய ஆட்சி அமை
4.    சுதேசியம் கடைபிடி

என்ற அவரின் தத்துவங்கள் இந்தியாவை ஒரு புதிய மக்கள் புரட்சிக்கு ஈட்டு சென்றது . " நம்மிடம் ஆயுதங்கள் இல்லை அது நமக்கு தேவையுமில்லை , ஆனால் நம்மிடம் உள்ள மிகப்பெரிய அரசியல் ஆயுதம் புறக்கணிப்பு. உங்கள் சக்திகளை ஒன்று  திரட்டுங்கள் பிறகு செயலில் இறங்குங்கள் , நம் கோரிக்கைகளை யாரும் ஒதிக்கி விட  முடியாது " ,என்ற திலகரின் உறுமல் பலரிடம் சுதந்திர வேட்கையை பற்ற   வைத்து கொழுந்து விட செய்தது.

நாம் நினைப்பது போல் காங்கிரஸ் கட்சியொன்றும் இந்திய விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சி அல்ல! ஆங்கில ஆட்சிக்கு உதவிபுரியும் சில ஜமின்தார்களையும், செல்வந்தர்களையும் கொண்டு   ஹும்(HUME) என்ற வெள்ளையரால் தொடங்கப்பட்ட கட்சி தான் காங்கிரஸ். முதலில் அது ஆங்கில அரசின் ஜால்ரா கூட்டமாகவே இருந்தது.பின்பு அது விடுதலை இயக்கமாக மாற பல தலைவர்கள் பாடுபட்டனர் அதில் மிக மிக முக்கியமானவர் திலகர். காங்கிரஸ் கட்சி மிக சாதுவான நடைமுறையை கையாண்டு ஆங்கில ஆட்சிக்கு  பெரிய எதிர்ப்புக்கள் தெரிவிக்காத நேரத்தில் திலகர் சுயாட்சி நம் உரிமை என்று கொந்தளித்தார். இது கட்சியில் பிளவை ஏற்படுத்தியது , உண்மையான சுதிந்திர வேட்கை கொண்ட பலர்      திலகரின் பின்னால் அணிவகுத்தனர். பின்பு இதுவே  ஒருங்கிணைத்த சுதிந்திர போராட்டமாக உருபெற்றது. திலகரே முதல்  ஒருங்கிணைத்த சுதிந்திர போராட்ட  தலைவராகவும் போற்றப்பட்டார் .

காந்தியடிகளின் அரசியல் குரு கோபால கிருஷ்ணா கோகுலே என்றாலும் காந்தியின்  சுதேசிய கொள்கைகள், காதி போன்ற கோட்பாடுகள் திலகரிடமிருந்து பெற்றதே!   மகாத்மாவுக்கே மகா உன்னத கருத்தகளை தந்த திலகர் இன்றைய நிலையில் வெறும் பெயரளவில் அறியப்படுவது வெட்ககேடான நிலையே !  இதற்கு காரணம் , நான் முன்னர்  சொன்னதுபோல் சில தலைவர்களை மட்டும்  கொண்டு நம் சுதிந்திர வரலாற்றை சுருக்க முயல்வதே.

இந்தியாவின் வரலாற்றையும், பண்பாட்டையும் பரப்ப வேண்டிய ஊடகங்களோ பணத்தாசை பிடித்து அலைகின்றன. சமூக பொறுப்புள்ள ஊடகங்களான தொலைக்காட்சிகள்  சுதிந்திர தினத்தன்று நாட்டுக்கு உழைக்கும் கவர்ச்சி நடிகைகளின் பேட்டிகளையும்,செக்கிழுத்த நடிகர்களின் செயல்பாடுகளையும் ஒளிபரப்பி  நேரத்தையும், இளைஞர்களின் ஆற்றலையும்  பாழாக்குவது மேலும் வேதனையே !  

இந்த 64 வது சுதந்திர தினத்தன்று நாட்டுக்கு உழைத்த பல தலைவர்களின் வரலாறையும் , நம் நாட்டின் பண்டைய நடைமுறைகளையும் அறிந்து கொள்வதே அந்த தினத்துக்கு நாம்  செய்யும் சிறப்பு .