அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Friday 20 August 2010

உலகின் மூத்தக்குடி


 "இந்தக்கட்டுரை  மிளகையும் அரிசியையும் சேர்த்து செய்யும் பொங்கலைப்   போல  வரலாற்றையும், பூகோளத்தையும் கலந்து எழுதப்பட்டது. இதை படிக்கும் (சாப்பிடும்) போது உங்களுக்கு தூக்கம் வரலாம் அதை தவிர்த்து  கட்டுரையை   நீங்கள் படித்து முடித்தால்   உங்கள் முதுகெலும்பு உங்களை  அறியாமல் நிமிர்வதை உணரலாம்" 


Picture


இந்திய வரலாறு வெள்ளையர்களுக்கும்   மற்றும் பிற  வெளிநாட்டவர்களுக்கு  கற்பனைகளை புகுத்தும் களமாகவும் , தங்கள் ஆதிக்க எண்ணங்களை வெளிப்படுத்தும்  உறைவிடமாகவும்  இருந்துவந்தது. அவர்கள் கருத்துப்படி இந்தியர்களுக்கு எந்த தொன்மையான  வரலாறும் இல்லை, இந்திய நாகரிக வரலாறு என்பது பாரதீய புராணங்களில் வருவது போல  10000 வருட பழமையானது என்பது வெறும்  கட்டுக்கதை என்றே கருதிவந்தனர்.இந்திய புராணங்கள் அனைத்தும் கற்பனையே, வேதங்கள் அனைத்தும் சொற்ப பழமையானதே என்ற  புதிய சித்தாந்தங்களை பரப்பினர்.அந்த சமயத்தில் பல இந்தியர்கள் அதை எதிர்த்தனர் ஆனால் அவர்களும் வெள்ளையர்களின் விஞ்ஞான தத்துவப்படி நிரூபணம் செய்யமுடியாமல் தவித்தனர். பாரத வரலாறே வெள்ளையர்களின் திட்டமிட்ட அட்டவணை ஆகிவிடுமோ, நம் உண்மை வரலாறு கற்பனைகளாகவும், நம்பிக்கையாகவும் புதைந்துவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த  நேரத்தில் நம்மை காத்ததுதான் ஹரப்பா, மொஹெஞ்சதரோ போன்ற புராதான  நகரங்களின் கண்டுபிடிப்பு .



கிபி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால்  மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டது , அது சிந்து நதியின் அருகாமையில்  இருந்ததால் அதற்கு அவர் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) என்று  பெயரிட்டார். பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா(Harappa) நகரம் , லோதல்(Lothal) நகரம் என்று  சிறியதும் பெரியதுமாக 2600 க்கு  மேற்பட்ட கட்டிட பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவை மேற்கே ஈரானுக்கு இடையிலும் , வடக்கே துர்க்மேனியா,பக்த்ரியா மற்றும் பமிர்ஸ் வரையும்,கிழக்கே மேற்கு உத்தர பிரதேஷ் வரையும் , தெற்கே மகாராஷ்டிராவில்  உள்ள  கோதாவரி வரை நீண்டு , வடிவேலு சொல்வது போல் "அம்மாடி எத்த தண்டி " என்று சார்.ஜான் மர்ஷலே சொல்லும் அளவுக்கு நீண்டதொரு நெடும் கலாச்சார அமைப்பாக திகழந்தது.      



இந்த மாபெரும் கண்டுபிடிப்பு பாராட்டுக்களுடன்  பல சந்தேகங்களையும் கிளப்பியது.இந்த நகரங்கள் எப்படி அழிந்தது அவை ஆர்ய படையெடுப்பில் அழிந்ததா அல்லது இயற்கை சீற்றங்களால் அழிந்ததா என்று அனைவரையும் மண்டையை பிக்க வைத்தது.இந்த கண்டுபிடிப்புகளுக்கு பின் வேத பாடல்களின் மேற்கோள்களும் , கண்டுபிடிக்கப்பட்ட இடங்களும்  ஓரளவு ஒத்துவந்ததால்   இந்த ஆதாரங்கள்  அனைத்தும் சிந்து சம வெளி நாகரிகம் மிக மிக தொன்மையான நாகரிகம் என்றும் , அதன் கட்டிடக்கலை     இன்றளவும் வியக்கத்தக்கது  என்றும் உலக அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது   . சும்மா சொல்லக்கூடாது, நம்மவர்கள் 5000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் சேமிப்பு குளங்கள் ,கிணறுகள்,குளியல் அறைகள்,திட்ட மிட்ட சாலைகள், மிக உயர்ந்த வியசாய முறை , நிர்வாகம்,கலை , எழுத்து வடிவம் ,ஒழுங்கான சாக்கடை வசதி என்று அநியாயத்துக்கு அசத்தியிருந்தனர். இதை பார்த்த வெள்ளையர்களுக்கு தங்கள் டங்குவார் அறுந்து விட்டது போல் இருந்தது, இருக்காதா பின்னே! இந்தியர்கள் இந்த சாதனைகளை செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளையர்கள் அம்மணமாக காட்டில் அல்லவா அலைந்து கொண்டிருந்தனர்.    



இதற்கு பின்பும் ஏதோ குறைவது போல் தெரிந்தது, இந்திய நாகரிகம் பழமையானது என்று நிரூபணம் ஆகிவிட்டது இருந்தும் வேதங்களில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதி எங்கே!. அப்படி ஒரு நதி உண்மையிலே இருந்ததா?, அல்லது வெறும் கற்பனையா!, என்றல்லாம்  பலர் மண்டையை உடைத்து கொண்டிருந்தனர். வேதங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் தற்போது இருந்தாலும் இந்த சரஸ்வதி நதி எங்கே போனது?ஏன் அனைவரும் சரஸ்வதி நதியை இவ்வளவு முக்கியத்துவம்   கொடுத்து தேடினர்?, போன்ற ஐயங்கள்  நம் மனதில் எழலாம், ஏனெனில்  இந்திய புராணங்களில் சரஸ்வதி நதிக்கரை மிக பிரசித்தம். அவ்வளவு ஏன் மகாபாரத யுத்தம் கூட சரஸ்வதி நதிக்கரையிலே நடந்ததாக மகாபாரதத்தின் ஆசிரியர் வியாசர் குறிப்பிடுகிறார்.  வேதங்களும் சரஸ்வதியை   நதிகளின் தாய் என்று வர்ணிக்கிறது.  எப்படியோ சரஸ்வதி நதி மட்டும் கண்டுப்பிடிக்கப்பட்டால் நம் இதிகாசங்களும் , புராணங்களும் உண்மையே! என்று மெய்பிக்க முடியும், அதற்கு மேலாக ஆரிய படையெடுப்புக்களின் உண்மை தன்மையை  உலகுக்கு உணர்த்த முடியும் என்ற எண்ணம் இந்திய வரலாற்று ஆர்வலர்களிடம் இருந்தது.   



இதற்கெல்லாம்  தீர்வாக அமைந்தது 1970 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டு செயற்கைக்கோள்   எடுத்த  படம். அந்த படத்தை பார்த்த நம் நிலவியலாளர்களுக்கு  புதிய சரித்திரம் பிறக்க போகிறது என்ற நம்மிக்கை பிறந்தது. அந்த படம் மேற்கு மற்றும் வடக்கு இந்தியாவில்  பல நூற்றாண்டுகளுக்கு    முன்பு மறைந்த நீர் தொடர்களை பற்றி தெளிவாக விளக்கியது. இது மறைந்த சரஸ்வதி நதியின் நீர் படலங்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டது .    பின்பு சரஸ்வதி நதியின் முழு  வரைபடமும் தயாரிக்க பட்டு சரஸ்வதி நதியை தேடும் படலம் 1982  ஆம் ஆண்டு தொடங்கியது . இதற்கிடையில் பாபா அணு ஆராய்ச்சி மையம் 1995  ஆம் ஆண்டு வெளியிட்ட   அறிக்கையில் ராஜஸ்தான் பாலைவனத்தில்  50  - 60 மீட்டருக்கு அடியில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .  கண்டுபிடிக்கப்பட்ட  நீர் வளம் பாலைவனத்தில் கோடை காலங்களில் கூட விவசாயம் செய்ய போதுமானது என்று அந்த அறிக்கை மேலும் ஆச்சிரியத்தை கூட்டியது.(ராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வளம் சரஸ்வதி நதியின் நீரோட்டம் என்றும், சரஸ்வதி நதி தற்போது உள்ள தார் பாலைவனத்தின் வழியாக ஓடியது என்றும் அப்போது அது பாலைவனமாக  இல்லை என்றும் பின்பு அறிஞர்கள் விளக்கியது குறிப்பிடத்தக்கது)   



சரஸ்வதி நதியின் வழித்தடம் மிகவும் சுவாரசியமானது அது கைலாஷ் மானசரோவர் மலை பகுதியில் தொடங்கி சிவாலிக் கால் தடங்களில் ஓடி பின்பு ஹிமாலயத்தை அடைந்தது ஹர்யான மாநிலத்திலுள்ள க்ஹ்கர்  பள்ள தாக்கு வழியாக ராஜஸ்தான் பாலைவனம்    மற்றும்  பாகிஸ்தானில் உள்ள சோலிஸ்தான் பாலைவனம் வரை நீண்டு  பின்பு நாரா பள்ள தாக்கு வழியாக அரபிக்கடலை  அடைகிறது. இந்த நதியின் வழி தடத்தை  ஆராய்வதன் மூலம் சரஸ்வதி நதி சிந்து நதியின் இணை கோடாக ஓடியது புலப்படுகிறது.சரஸ்வதி நதிக்கும் சிந்து நதிக்கும் இடைப்பட்ட இடத்தில் தான் ஹரப்பா, மொஹெஞ்சடரோ போன்ற கலாச்சார அமைப்புகளும் இருந்தது. நாம் முன்பு கண்டது போல சிந்து சம வெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட   2600 பகுதிகளில் 2000க்கு  மேற்பட்ட பகுதிகள் சரஸ்வதி நதிக்கரைகளில்    இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது . இதன் மூலம் 1920 ல் சார்.ஜான் மார்ஷல்  கண்டுபிடித்தது சிந்து சம வெளி நாகரிகம் இல்லை அது சரஸ்வதி சிந்து நாகரிகம்  என்றே  அழைக்கப்பட வேண்டும்  என்று  எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணம் ஆகிவிட்டது. தற்போது மறைந்த சரஸ்வதி நதியை மிண்டும் ஓட வைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.        



சரஸ்வதி நதியின் கண்டுபிடிப்பு பல கேள்விகளுக்கு விடை தரும் வண்ணம் உள்ளது.ஆரிய படையெடுப்பு   என்ற  ஒன்று இந்தியாவில்   நடைபெறவில்லை மாறாக  சரஸ்வதி நதி வறண்டதால் சரஸ்வதி-சிந்து சமவெளி மக்கள்   கங்கை மற்றும் யமுனை    நீர் கரைகளுக்கு புலம் பியர்ந்தனர் என்று நம்மால் எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது.அதுமட்டும் இன்றி பாரத நாட்டவர்  வேதங்களில் தங்களை தாங்களே ஆரியர் என்று அழைத்ததும்  புலனாகிறது மேலும் இதன்  மூலம் ஆர்யா-திராவிட மோதல் கட்டு கதைகள்  பிசுபிசுத்து போகும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.இந்த சூழ்நிலையில் கடல் ஆய்வாளர்  Dr.ராவ், கிருஷ்ண புராணத்தில் கூறியுள்ள துவாரகா   என்ற கடற்கரை நகரம் கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் இந்திய  இதிகாச புராணங்கள் வெறும் கட்டுக்கதையே  என்ற வாதம்  முற்றுப்பெரும். மெசொபோடோமிய(Mesopotamia) நாகரிகம் தான் உலகின் பழமையான வளர்ந்த  நாகரிகம் என்ற கூறப்பட்டாலும் அதற்கு   இணையான அணைத்து அம்சங்களும் மொழி , கலை மற்றும்   ஆயுதங்களில் அதைவிட   சிறந்த தன்மையும்  கொண்டதுதான் சரஸ்வதி சிந்து நாகரிகம். சரஸ்வதி சிந்து நாகரிக ஆராய்ச்சிகள்  தொடர்ந்து வருவதால் மேலும்  பல ஆதாரங்கள்  கிடைக்க கூடும்.எனவே உலக முன்னோடி கலாச்சார அமைப்புகளில்  சரஸ்வதி சிந்து நாகரிகம் முதன்மையானது என்பதில் இனி நமக்கு எந்த சந்தேகங்களும் வேண்டாம்   



     இனி நீங்களும் உங்கள்   கைகளை உயர்த்தி புஜங்களை மடித்து சொல்லுங்கள் நாம் தான் இந்த உலகின் சிறந்த  கலாச்சார மூத்தக்குடி  என்று !!!     

No comments:

Post a Comment