அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Thursday 24 March 2011

ஓட்டா இல்லை வேட்டா!

Picture
இந்த தேர்தல் எந்த செய்தியை சொல்லப்போகிறது !

ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா அல்லது எதிர்க்கட்சி அரியணை ஏறுமா என்பதல்ல செய்தி. அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் தமிழகத்தை வழிநடத்த போகிறார்கள் என்பதே நம் கேள்வியாக இருக்க வேண்டும். இந்த கேள்வியை நாம் கேட்டு என்ன செய்யப் போகிறோம் என்று நீங்கள் நீனைத்தால் சத்தியமாக மிகப்பெரிய கெட்டை இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். இந்த நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் அது நம் பர்வைக்குட்பட்டதாக  இருக்க வேண்டும் அதுவே சிறந்த ஜனநாயகம்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நேதாஜியும், காந்திஜியும், காமராஜரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை. நிச்சியம் இன்றைய தேர்தல் களங்களில் ரௌடிகளும், தாத்தாக்களும், பணத்திற்காக பிணத்தை தின்னும் அற்பர்களுமே நிரம்பியுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு நம் பங்கை ஆற்ற ஒரு வாய்ப்பாக தேர்தல் களங்களை நாம் பயன் படுத்தமுடியும். எப்படி? எங்களை தேர்தலில் நிற்க சொல்கிறீர்களா ? என்றால் நிச்சியம் இல்லை, ஆனால் தேர்தலில் உங்கள் பங்களிப்பை நிச்சியம் பதிவு செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள். தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பான்மையானோர் கள்வர்கள் அப்படியிருக்க யாரை தேர்ந்தெடுப்பது?, குழப்பமே வேண்டாம்  அவர்களை தேர்ந்தெடுக்க உங்கள் வாக்குரிமை பயன்படக் கூடாது என்பதே உங்கள் தேர்தல் பங்களிப்பாக இருக்க வேண்டும். இன்று அரசியல் களம் கொள்ளையர்களின் கோட்டையாக மாறிவிட்டதற்கு மிகப்பெரிய காரணம் நாம் தான். யாராவது வந்துவிட்டு போகட்டும் என்ற அலட்சியம் இன்றைய அரசியலை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது.


இந்தியாவில் சராசரியாக எழுபது சதவீத வாக்குகளே பதிவாகின்றன, பதிவான வாக்குகளில் முப்பத்தி ஐந்து முதல் நாற்பது சதவீதத்தை வெற்றிபெறும் கட்சியும், இருபத்தி ஐந்து முதல் முப்பது சதவீதத்தை எதிர் கட்சியும் மற்ற ஓட்டுக்களை முன்றாம் தர கட்சிகளும் பெறுகின்றன. உன்னிப்பாக கவனித்தல் நூறு  ஓட்டுக்கள் இருக்கும் இடத்தில் எழுபது ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகிறது, அதில் இருபத்தி ஐந்து முதல் முப்பது ஒட்டு  வாங்கும் கட்சி வெற்றிபெறும் கட்சி. யாருக்கு சரிபாதிக்கு மேல் ஆதரவு இருக்கிறதோ அவர்களே நாட்டை ஆள முடியும் என்பதே ஜனநாயகம். ஆனால் வாக்குரிமை உள்ளவர்களில் முப்பது சதவீதத்திற்கும்   குறைவான ஆதரவுள்ளவர்கள் ஆட்சி செய்வதிற்கு காரணம், அனைவரும் தங்கள் வக்குரிமைகளை பயன் படுத்தாததுதான். மேற்சொன்ன உதாரணத்தில் நுற்றுக்கு நூறு வாக்குகளும் பதிவாகியிருந்தல் வெற்றி பெற்ற கட்சி தோல்வியடைந்திருக்க  கூடும், பத்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பெற்ற கட்சி கூட சிறப்பான வெற்றிகள் பெற்றிருக்க கூடும். நாம் வாக்குரிமையை பயன்படுத்தாமல் விட்டதால் ரத்தம் சிந்தி பெற்ற ஜனநாயகம் இன்று கேளிக் கூத்தாகி நிற்கிறது.       




தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒரு சம்பர்தாயமான சடங்காக இல்லாமல் நம் நாட்டை வழிநடத்த தரும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும். தேர்தல் நாள் விடுமுறை என்பதால் வாக்களிப்பதை தவிர்த்து தொலைகாட்சிகளில் பொழுதை போக்குவது, நண்பர்களை பார்க்க செல்வது அல்லது அந்த நாளை கேளிக்கைக்கு பயன் படுத்துவது போன்ற செய்கைகள் நமக்கு நாமே தீ மூட்டுவதற்கு ஒப்பாகும். இதுவரை அறிவில்லாமல் வைத்த தீதான் தினம் தினம் பல ரூபங்களில் நம்மை சுட்டெரிக்கிறது(உபயம்: விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு இன்னும் பல), எனவே மீண்டும் அந்த தவறை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .


 பணத்திற்கு வாக்களிப்பது என்ற சிந்தனை நம் நாட்டில் பரவலாக்க பட்டிருக்கிறது. இதனால் என்ன நடக்கும், நம் வரிப்பணத்தை திருடியவர்கள் அதில் ஒரு பகுதியை நமக்கு லஞ்சமாக தருகிறார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் அரசாங்கத்திற்கு வரி மூலம் பணம் தரும் முதலாளியான நம்மிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை சட்டத்திற்கு புறம்பாக கொள்ளையடித்து அதில் ஒரு சொற்பத்தை நாயிக்கு எலும்பை விட்டெறிவது  போல நமக்கே மீண்டும் தருகிறார்கள். நாமும் நாய் போல் அவர்களுக்கு     வாலாட்டுகிறோம். நாய் கூட தினமும் உணவிட்டால் தான் வாலாட்டும், நமோ ஒரு முறை எலும்பை விட்டெறிந்தால் போதும்  ஐந்து வருடத்திற்கும் சேர்த்து வாலாட்டுவோம். பணம் வாங்கிக்கொண்டு நாம் வாக்களித்தால்  நாம் நாயைவிட அல்ப்பமா? என்று நம்மை நாமே கேட்டுகொள்வது நல்லது.


நடைபெறப்போகும் சட்ட மன்ற தேர்தலில் நம் வாக்களிப்பு நிச்சியம்  பொற்கால ஆட்சியை தேர்வு செய்யாது. காரணம் நிற்கும் மிகப்பெரிய    கட்சிகள் அனைத்தும் ஊழல் கறை படிந்ததே! எனவே நம் தேர்வு யார் வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்க வேண்டும். இல்லை இருவரையும் பிடிக்கவில்லையா? இருக்கவே இருக்கிறது 49-ஓ! யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர் பதிவு செய்ய வழிவகுக்கும் சட்டம் தான் இந்த 49 ஓ. நேராக வாக்கு சாவடிக்கு செல்லுங்கள், ஆவண சோதனைக்கு பிறகு கைகளில் மை வைப்பார்கள் அதான் பிறகு வாக்கு சாவடி அதிகாரியை தொடர்பு கொண்டு தாங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று சொன்னால், அவர் 49 ஓ பயன்பாட்டை சொல்லுவார்.


இதற்குமேலும்  வாக்களிக்காமல் நீங்கள் இருந்தால் அது வண்ணத்தொலைக்காட்சி கொடுத்து, பல வண்ணங்களில் லட்சம் கோடிகளை கொள்ளையடிக்கும் அராஜக கும்பல் ஆட்சி அமைக்க மீண்டும்  வழிவகுக்கும். அப்படி கொள்ளையடித்து விட்டு நான் பூணூல் போடவில்லை அதனால்தான் என்னை குற்றம் சாட்டுகிறார்கள் என்று உங்களுக்கு கொடுத்த வண்ணத்தொலைகாட்சி வாயிலாகவே கருத்து சொல்வார்கள், ஆட்சியை குடும்பத்துடன் பங்கிட்டு மகிழ்வார்கள், இலவசங்களை வாரி வழங்கி மக்களை பிச்சைகாரர்கள் ஆக்குவார்கள்,  நம் பெயரில் கோடி கோடியாக கடன் வாங்குவார்கள், ஜாக்கிரதை!


எனவேஏதாவது ஒரு வழியில் உங்கள் வாக்கை பதிவு   செய்யுங்கள் !

நாட்டின் வளர்ச்சிக்கு தோள் கொடுங்கள் !

No comments:

Post a Comment