அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

இதுவும் கவிதைதாங்க

இதுவும் கவிதைதாங்க  

             என்னுடைய கிறுக்கல்களையும் , உளறல்களையும் கவிதைகள் என்ற பெயரில் ங்கே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன் . பிடித்தால் ரசியுங்கள்  இல்லையென்றால் "என்ன கொடுமையென்று சிரியுங்கள் " . இரண்டுமே லாபம் தானே !!!!
                அதற்காக நானும் 'கவிஞர் விக்னேஷ் ' என்று பெயருடன் போட்டுக்கொள்வேன் என்று யாரும் பயப்பட வேண்டாம். என் அப்பா தமிழக முதல்வர் அல்ல சாதாரண கணக்கர்.


என்ன செய்யமுடியும் நம்மால்

கண் முன்னே நாடு தாரைவார்க்கப் படுகிறது
நம் கண்ணை பிடுங்கியெறிந்து அண்டையர் கண்ணில் பார்வை
தேசிய கீதத்தில் மதவாதத்திற்கு சிறப்பு ஒதுக்கிடு
சாதி என்ற வார்த்தையில் அரசியல் கூட்டத்தின் சதி
தினம் தினம் தமிழ் சந்திப்பது பல கற்பழிப்பு   
மானம் என்ற வார்த்தை தமிழில் மட்டும் உள்ளது தமிழருக்கல்ல   
பன்னாட்டு நிறுவனகள் செய்கிறது  ஒரு இனச்சுரண்டல்
ஒரு புறம் புடைத்த வயிறு மறுபுறம்  பட்டினிச்சாவு
 கற்பு பற்றி பேசுவது விளம்பர உத்தி
தெருவெல்லாம்   தமிழ்முழக்கம் செய்தவர்கள் பிள்ளைகள் ஆக்ஸ்போர்டில்
பெண்ணுரிமை என்பது அழகு போட்டியும் அரைகுறை ஆடையும்

இத்தனை அவலங்கள் இருந்தும் என்ன செய்யமுடியும் நம்மால்
நம் முதுகெலும்பு  உருவப்பட்டது நம் பாட்டன் காலத்தில்   

இந்தியன் என்றொரு இனமுண்டு 

பிறக்கும் போதே வென்றுவிட்டோம் 
நாம் இந்தியனாக பிறந்துவிட்டோம் 
ஆயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்டோம்   
இருந்தும் அகிலம் ஆள்கின்றோம்

சிந்திக்க பிறந்தது மனிதன் மனம் 
என்றும் சிகரங்கள் தொடுவது நமது இனம் 
வெற்றிகள் தோல்விகள்  நமக்கில்லை 
பிறர் இடர் கண்டு என்றும் மகிழ்ததில்லை

உலக அறிவியல் அறிந்தவர் நாம் 
நல்ல கலைகளில் வல்லவர் நாம் 
சிறு புல் கூட நம் மகிமை பேசும் 
அந்த இமயம் கூட நம்மை போற்றும் 

உலகையாளும் வீரமுண்டு பிறர் 
குடியளிக்காத பெருமையுண்டு 
பகைவர் நம் பகைக்கொண்டல் 
வெட்டி வீழ்த்தும் தீரமுண்டு

பலரும் நம்மை மறைத்தனர் 
நம்வாழ்வுதனை சிதைத்தனர் 
இருந்தும் அவர்களை மன்னித்தோம் 
ஒரு அன்னையாக சிந்தித்தோம்  
  
பல நாள் மாணவராய் இருந்தது போதும் 
இனி ஆசானாக மாறுவோம் 
நாம் சாதனைகள்  பல செய்து 
இந்த உலகையாளுவோம் 

சிங்கமென நம் நடை அமையட்டும் 
அது பல சிகரங்கள் தொடட்டும் 
புலி போல் நம் உறுமல் இருக்கட்டும் 
அது நம் பெருமை உரைக்கட்டும் 

நாளைய வரலாறு நம்மோடு 
இனி நமக்கு நிகரேது 
புறப்படுவோம் மகிழ்வோடு 
இனி இந்த புவி நம்மோடு 

 

என்றும் நீ 

வெற்றியும் தோல்வியும் நிலைப்பாடு
அது மற்றவர் பார்வையின் வெளிப்பாடு
இதுவே  உலகின் சமன்பாடு
நீ சிரித்து கொண்டே முன்னேறு
வாழ்வு என்றும் உன்னோடு !!!

சாதனையாளர்கள் 

கடமையை உவந்து செய்வது சாதனையென்றால் ;
நாம் அனைவரும் சாதனையாளர்கள்!
ஏனெனில் நாம் அனைவரும்
உண்கிறோம் !
உறங்குகிறோம் !
உயிர்பிக்கின்றோம்!
  

தவறு  

சரியென்ற இடத்தின்
தொலைவைக் காட்டும்
மைல்கல் தவறு
 

கோபம்

நம்   இயலாமையின் தாக்கம் 
பிறர் இயலாமையின் மேல்
அதன் பெயர் கோபம்
 

நேசம் 

நாம் அனைவரையும் நேசிக்கிறோம்
அனைவரும்  நம்மை நேசிப்பதாக நினைத்து

நாம் அனைவரையும் வெறுக்கிறோம்
அனைவரும்  நம்மை வெறுப்பதாக நினைத்து

நாம் நேசிப்பதும், வெறுப்பதும் ;
நம்மை பொருத்தா இல்லை பிறரை பொருத்தா ?

பாலினக்கொடுமை 

ஆண்மையை வெறுக்கும் பெண்மையென்றால்
பெண்மை கூட கொடுமைதான்!

பெண்மை
யை வெறுக்கும் ஆண்மையென்றால்
ஆண்மை
 கூட கொடுமைதான்!

இரண்டும் வெறுத்து வாழ  துடிக்கும்
துறவரம்    கூட கொடுமைதான்!

ஆண்மையையும் , பெண்மையையும்  விளக்க துடிக்கும்
இந்த கவிதை கூட கொடுமைதான்! 
   

காதல் தோல்வி 

நகம் நறுக்குவது;
முடி வெட்டுவது;
வியர்வை துடைப்பது;
எச்சம் உமிழ்வது;
இவையனைத்தும் வாழ்வின் தோல்வியென்றால் ,
காதலால் அடைவதும் தோல்வியே !!!

காதல் 

சிந்தனையற்ற உளறல்
காரணமற்ற சிரிப்பு
தேவையற்ற கவலை
சில சமயம் நடுக்கம்
பல சமயம் ஒடுக்கம்
மொத்தத்தில் ரசனையான ரசாயன மாற்றம் 

இந்த காதல் 

வாழ்வின் சாராம்சம் 

வந்தால் அதிகம் இருப்பதில்லை
போனால் திரும்பி வருவதில்லை
காசிருந்தாலும் கிடைப்பதில்லை
கடைசி வரை புரிவதில்லை
இது தான் மனித உயிரின் சாராம்சம்
இதை உணர்த்துவது தமிழ்நாட்டின் மின்சாரம் 

நம்மால் முடியும் 

உன்னை வெல்ல உன்னால் முடியும்
உன்னை அழிக்கவும் 
உன்னால் முடியும்
வாழ்வை சந்திக்க உன்னால் முடியும்
பல விந்தைகள் செய்ய உன்னால் முடியும்
பகையை நசுக்க உன்னால் முடியும்
நட்பை குவிக்க உன்னால் முடியும்
எல்லாம் முடியும் உன்னால் முடியும்
இறைவன் அருகிலிருந்தால் முடியும்
அந்த இறைவனை உன்னருகே அமர்த்தவும் உன்னால் முடியும்