அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Sunday, 14 February 2010

சர்தார்ஜிகளை அவமானபடுத்தாதீர்கள்


யார் இந்த சர்தார்ஜிகள் 
சீக்கிய மதத்தை சேர்த்தவர்கள் பொதுவாக தங்கள் பெயரின்  பின்னால் சிங் என்ற அடைமொழியை சேர்த்துக்கொள்வர்கள்,இது அவர்களின் மதக்கோட்பாடு. இவர்களே சர்தார்ஜிகள்   என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியா நாட்டை அந்நியர்களிடம் காக்க ஒரு மதமே தன் குருமாருடன் சேர்ந்தது  என்றால் அது சீக்கிய மதமாக மட்டுமே இருக்க முடியும்.அந்நியர் என்றவுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று எண்ணிவிட வேண்டாம்,அதற்கு முன்பும் பல அந்நிய அடக்குமுறைகளை வீரமுடன் எதிர்த்தவர்கள் இந்த சீக்கியர்கள். சீக்கிய மதமே 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியதுதான் , தோன்றிய நாள் முதல் இன்று வரை இந்த நாட்டை காக்க அவர்கள் உழைத்து வருகிறார்கள்.மொத்தத்தில் கிரேக்கத்தில் எப்படி ஸ்பார்டன் வீரர்கள் இருந்தார்களோ , அதபோல் இந்தியாவில் சிங்குகள்(சர்தார்ஜிகள்) இருந்தார்கள் .

சர்தார்ஜிகள் எப்படி கேலிப்பொருளானார்கள்      


அந்நிய அடக்குமுறையை எதிர்ப்பதை மத நோக்கமாக கொண்ட சீக்கியர்கள் ஆங்கிலேயர்களையும் எதிர்த்தனர். இயற்கையாகவே உடல் வலிமை பொருந்திய சீக்கியர்களை அடக்க ஆங்கிலேயர்கள் பெரும் கடினப்பட்டனர். என்றுமே பிரித்தாலும் மனோபாவம் கொண்ட ஆங்கிலயர்கள், சர்தார்ஜிகளின்  உடல் வலிமையை மையப்படுத்தி அவர்கள் புத்தி இல்லாதவர்கள் , மடையர்கள் என்ற என்னத்தை வளர்க்கும் வகையில் அவர்களை பற்றிய நகைச்சுவை துணுக்குகளை பத்திரிக்கைகளின் வாயிலாக சர்தார்ஜி ஜோக் என்று அச்சடித்து அவர்களை கேலிப்பொருளக்கினர்.அன்று தொட்டு இன்று வரை சர்தாஜி ஜோக் என்று இந்தியா பத்திரிக்கைகள் கூட தொடர்ந்து போடும்படி செய்துவிட்டனர். நாமும் வடிவேல் போல " வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான் டா " என்று தொடர்ந்து சர்தார்ஜி ஜோக்குகளை பரப்பிவருகின்றோம்.


நாம் எப்பேர்பட்ட மடையர்கள்


ஆங்கில ஆட்சியில் , சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில் மொத்தம் 121 பேர் தூக்கிலிடப்பட்டனர் , அதில் 93 பேர் சீக்கியர்கள் ,இதிலிருந்தே அவர்களின் தியாகமும், நம்  நாட்டின் மீதான பற்றும் புலப்படும். உலகையே உலுக்கிய ஜாலியன் வலாபக் படுகொலை சீக்கியர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதே !


இந்தியா இளைஞர்களின் வீர திருமகனாக திகழும் பகத் சிங்கும் கூட  ஒரு சர்தார்ஜியே !   சர்தார்ஜிகளின் வீரம் இந்தியா வரலாறு முழுவதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது .இன்றும கூட இந்திய ராணுவத்தில் அதிக   சீக்கியர்கள்  உள்ளனர். எனவே நம் நாட்டிற்கு உழைக்கும் ஒரு வர்க்கத்தை இழிமை படுத்துவது மிக மிக கேவலமான காரியம். இனிமேலாவது சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லாமல், அவற்றை பரப்பாமல் சர்தார்ஜிகளின் மகிமையை பரப்புங்கள், மேலும் யாராவது அவர்களை அவமதிக்கும் செய்திகளை பரப்பினால் அவற்றை தடுங்கள் .
பணம் வாங்கி படத்தில் நடிக்கும் திரைப்பட நடிகர்களை  வெக்கமில்லாமல் தலைவர் என்று சொல்லுவதும் ,அவர்களின் திரைப்பட செய்திகளையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்திகளையும் மின் அஞ்சல் வழி பரப்பும்  எத்தனையோ முட்டாள்களையும், அறிவிளிகளையும் காண்கின்றோம்.பணம் வாங்கி மக்களை ஏமாற்றும் நடிகர்களை தலைவர்கள் என்கிறோம் நாட்டுக்காக உழைக்கும் நம்மவர்களை (சர்தார்ஜிகளை)முட்டாள்கள் என்று செய்தி பரப்பிவருகிறோம்.நாம் எப்பேர்பட்ட மடையர்கள்!!!!!
சர்தார்ஜிகளை பற்றி நகைச்சுவை துணுக்குகளை பரப்புவது நம் ரத்தத்தை நாமே அசுத்த படுத்துவதற்கு  சமம் .வேறு எந்த நாட்டிலும் அவர்கள் நாட்டவரை அவர்களே கேலி செய்வதை கேள்விபட்டதுண்டோ !!!!    
சிந்தியுங்கள்  ! செயல்படுங்கள் !