அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Tuesday, 28 September 2010

இது என்ன ஸ்டைல்


பொதுவாக எனக்கு திரைப்படங்களை பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் எழுதுவது அல்லது பதிவு செய்வது பிடிக்காது. எனக்கு அபிமான நடிகர் என்பவர் என்னை தன் திறமையால் ஒரு வகையில் கவர்கிறார்.அதற்கு அவர் நடித்த திரைப்படத்தை பணம் கொடுத்து பார்க்கிறேன், அவ்வளவே எனக்கும் அவருக்கும் உள்ள உறவு. அதற்கு அவரை கொண்டாட தேவையில்லை, நாம் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் ஒரு வெங்காயத்தையும் கிழித்துவிடவில்லை.   சமிபகாலமாக எந்திரன் படத்தை பலர் சன் பிச்சருடன் போட்டி போட்டு இணையதளம் வாயிலாக விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு மின் அஞ்சல்  எந்திரனையும், ரஜினியையும் கடவுள் என்று புலம்புகிறது, அதற்கு போட்டியாக மற்றொரு மின் அஞ்சல் எந்திரனின் வண்டவாளங்களை சாடுகிறது. யாராவது இணைய தள வாயிலாக தங்கள் நேரத்தை வீன்செய்ய விரும்பினால் எந்திரன் சம்பந்த பட்ட மின் அஞ்சல்களை படித்து பயனடையலாம்.ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை, அவரை ரசிக்காதவர்கள் யாரும்மில்லை. ஆனால் அவர் நாம் வாங்கும் டிக்கெட்டில் சம்பாதிக்கும் ஒரு சாதாரண மனிதர். அவரை தனிப்பட்ட முறையில் புகழ ஏதாவது ஒரு காரணத்தை சொன்னால் என்னை போன்றோர்களும் ரஜினியை தலைவர், கடவுள், மாமனிதர், மகாத்மா  என்று ஒப்புக்கொள்வோம்; ரஜினியை யாராவது திட்டினால் நாங்களும் திருப்பி அவர்களை திட்டி , கேலி செய்து   மின் அஞ்சல்கள் அனுப்ப தயாராக உள்ளோம் என்பதையும்  தெரிவித்து கொள்கிறேன்.      

எந்திரனால் இந்தியா அடைந்த நன்மைகள்  :


  1.  இந்தியாவில் சமத்துவத்தை மலர செய்தது 
  2. அயோத்தி பிரச்சனையை திர்த்து வைத்தது
  3. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியது 
  4. காஷ்மீர் சச்சரவை தீர்த்தது 
  5. அத்தியாவிசிய  பொருட்கள் விலையை குறைத்தது 
  6. சீனாவின் மறைமுக  மிரட்டலை முடிவுக்கு கொண்டுவந்தது.Picture
எந்திரனுக்கு பாலபிசேகம் செய்வது போன்ற படங்களை பத்திரிக்கைகளில் பார்த்தேன். அந்த செய்தியை பார்த்த  ஒரு  முதியவர் சொன்னதை   அப்படியே சொல்கிறேன், " து என்ன  மானங்கெட்ட பொழப்பு டா இது  , போய் பொழப்ப பாருங்கடா " . என்று அவர் சொன்னார், மத்தபடி எனக்கும்  இதுக்கும் தொடர்பில்லை.

குறிப்பு :
பாலபிசேகத்தை  பற்றி பெரியவர் சொன்னது  தலைவர், தல, இளைய தளபதி அனைவருக்கும் பொருந்தும்.(மக்களே!  இந்த பலி பவத்தூக்கல்லம் நா ஆளாக மாட்டேன் !)

" தான் பேட்டிகள் கொடுப்பதில்லை  என்று அவரே சொன்னார், பின்பு எந்திரன் மிகப்பெரிய படம் என்று வீடு  வீடாக சென்று பிரச்சாரம் செய்கிறார்", மிக சிறந்த தலைமை பண்பு !!!! இவரை பின்பற்றும் தொண்டர்களும் இவரை போலவே இருப்பார்கள் போல!!!! நல்ல தலைவர் ! நல்ல தொண்டர்கள் ! சுத்த கிறுக்குபிடித்த கூட்டம் ........

நிச்சயம் ரஜினி சம்பாதித்தது இந்த  வெறிபிடித்த ரசிகர்களால் அல்ல, நாகரிகமான குடும்ப ரசிகர்களால். அதனால் தான் ரஜினி தெளிவாக இந்த வெறி பிடித்த முட்டாள் கூட்டத்தை தன் அருகே சேர்பதில்லை, தன் படத்தின் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் உபயோக படுத்தி கொள்கிறார்.அவர் கட்சி தொடங்க மறுப்பதின் முக்கிய காரணம் இந்த வெறி பிடித்த முட்டாள் ரசிகர்கள் அவரை  மிஞ்சி போனால் ஒரு சீட்டில் வெற்றி பெற வைப்பார்கள். அவரின் நாகரிகமான குடும்ப ரசிகர்கள், அவரை ஒரு நடிகராக மட்டும் கருதி மற்ற தொகுதிகளில் ஆப்பு வைப்பார்கள். ரஜினி தன் பண பாதுகாப்பில் மிக கவனமாக இருப்பார். ("டேய் இது மலைக்கு மல டைவடிச்சி சம்பாதிச்ச காசுட " என்று கவுண்டமணி சொன்னது  ரஜினிக்கு சரியாக புரிந்திருக்கிறது ").ரஜினி மிக புத்திசாலிதனமாக இந்த முட்டாள் ரசிகர்களை வைத்து இலவசமாக கட் அவுட் வைத்து , பாலபிசேகம் செய்து , மின் அஞ்சல் அனுப்பி தன் படத்தை புரோமோட்  செய்து சம்பாதிக்கிறார். முடிந்தால் அவரை இந்த முட்டாள் தனமான சடங்குகளை நிறுத்த சொல்லுங்கள் பார்க்கலாம். நிச்சியம் மாட்டார் !!!

நீங்க என்ன சொன்னாலும் எந்திரன் விஸ்வருப வெற்றி, எனவே எந்திரனின் ரசிகர்கள் செய்வதை மக்கள் ஏற்று கொண்டார்கள் என்று  சொன்னால் உங்களுக்கு ஒரு ரெடிமேட் பதில் ! தினமும் டாஸ்மாக்கில் எக்கச்சக்க கூட்டம் அதனால் மக்கள் அனைவரும் டாஸ்மாக்கை அரசே  நடத்துவதை அங்கிகரிப்பார்களா!!!!